2028 முதல் 2032 வரையான காலப்பகுதிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ் இருதரப்புக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து, ஐநா பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல், நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், தனியார் துறை முதலீடுகள் ஊடாக நீண்டகால கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைதல், டிஜிட்டல் மயமாக்கல், காலநிலை மீள்திறன், விவசாய நவீனமயமாக்கல், உணவுப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகள் குறித்து இரு கட்டங்களாக விரிவாக ஆராயப்பட்டதோடு, ஐநா முகவர் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயல்படுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐநா வதிவிட இணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தலைமையிலான இக்குழுவில் அசாம் பக்கீர் மார்க்கர், அசுசா குபோட்டா மற்றும் கிறிஸ்டின் பார்க்கோ ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.






