இலங்கையில் சுமார் 40,000 வரையிலான வைத்தியர்கள் அல்லாத 40,000 பேர் மருந்துகளை விநியோகிப்பதாக வெளிப்படுத்தல்வைத்தியர்கள் அல்லாத நபர்கள் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகச் சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ருவன் ஃபெர்டினாண்டு தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், உரிய மருத்துவத் தகுதியின்றி மருந்தகங்களில் பணியாற்றும் நபர்களும் இதில் அடங்குவதாகக் குறிப்பிட்டதோடு, நுண்ணுயிர் கொல்லிகளின் அதிகரித்த பாவனையால் கிருமிகளிடையே மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மை உருவாகி வருவதால் எதிர்காலத்தில் நோய்களுக்கு மருந்துகள் பயனற்றதாகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.







