தொடர்ந்தும் சரியும் தங்கத்தின் விலை

66
0
Spread the love

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன் இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று (20) 7,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளது. கொழும்பு செட்டியார்த் தெருத் தரவுகளின்படி இன்று முற்பகல் 10.00 மணிக்கு 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 317,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. நேற்றைய தினம் 24 கரட் பவுண் 352,000 ரூபாயாகவும் 22 கரட் பவுண் 323,800 ரூபாயாகவும் காணப்பட்ட நிலையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி நகை கொள்வனவாளர்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here