பருத்தித்துறையில் டெங்கு ஒழிப்புச் சோதனை 15 பேருக்குச் சட்ட நடவடிக்கை

45
0
Spread the love

பருவமழை நெருங்கி வரும் நிலையில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் தும்பளை கிழக்குக் கிராம சேவையாளர் பிரிவில் நேற்று (21) சமூக மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து வீடுகள், வர்த்தக நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் என மொத்தமாக 284 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 118 இடங்கள் நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான சூழல்களைக் கொண்டவையாக அடையாளம் காணப்பட்டதோடு, 16 இடங்களுக்குச் சிவப்பு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நுளம்புக் குடம்பிகள் காணப்படும் வகையில் சூழலைப் பேணிய 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here