சந்தைகளில் உள்நாட்டு சின்ன வெங்காயம் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நவம்பர் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை 527 ரூபாய் 60 சதத்திலிருந்து 675 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், வெள்ளை முட்டை ஒன்றின் சராசரி சில்லறை விலையும் 37 ரூபாய் 68 சதத்திலிருந்து 41 ரூபாய் 75 சதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் விலை 700 ரூபாயிலிருந்து 820 ரூபாயாகவும், வெள்ளை முட்டை ஒன்றின் விலை 39 ரூபாய் 60 சதத்திலிருந்து 42 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம் புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் சராசரி சில்லறை விலை 580 ரூபாயிலிருந்து 560 ரூபாயாகவும், கோவாவின் விலை 720 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.







