இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க தனது 58 ஆவது பிறந்தநாளை இன்று (24) கொண்டாடுகிறார். 1968 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி மாத்தளை, தீவகுவ பிரதேசத்தில் பிறந்த அவர், மாணவர் அரசியலிலிருந்து தமது அரசியல் பயணத்தைத் தொடங்கி பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் முக்கிய பங்களிப்புகளை வழங்கி வருகின்றார். 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லை எட்டியமை குறிப்பிடத்தக்கது.






