பஸ் நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை

53
0
Spread the love

 

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பஸ் நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

மத்திய பஸ் நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், உணவகம், ஓய்வறை, பயணச்சீட்டு வழங்குமிடம், நிர்வாகப் பிரிவு, செயற்பாட்டு அறை மற்றும் சாரதிகள் தங்குமிடம் ஆகியவற்றை நவீனமயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹெக்டெயர் 1.42 நிலப்பரப்புடன் கூடிய மத்திய பஸ் நிலையம் 1964 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாளாந்தம் 1500 – 2000 வரையிலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here