போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரோஜாக்கூட்டம், பம்பரக்கண்ணாலே, பார்த்திபன் கனவு, மனசெல்லாம், நண்பன் உள்ளிட்ட பல படங்களிலும் ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார்.
வந்தனா என்பரை காதல் திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரீகாந்த்துக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். தமிழில் ஸ்ரீகாந்துக்கு பெரிய வாய்ப்புகள் இல்லையென்றாலும் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில்தான் கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியைமை உறுதிசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னையில் கொக்கைன் போதைப்பொருளை விநியோகித்த குற்றச்சாட்டில் நபரொருவரை கைது செய்து விசாரித்த போது ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சில சினிமா பிரபலஙக்ளுக்கு அவர் போதைப்பொருள் விநியோகித்திருக்கின்றமை தெரியவந்துள்ளது.
இதில், நடிகர் கிருஷ்ணாவையும் விசாரிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதுடன் அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் ஸ்ரீகாந்த் “நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். நான் போதைப்பொருளை பயன்படுத்தியது உண்மை. ஆனால்,யாருக்கும்
விநியோகிக்கவில்லை. என் மகனை நான் கவனித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை இருக்கிறது” என பிணை கோரியுள்ளார்.
ஆனால், அதை நிராகரித்த நீதிபதி ‘போதைப்பொருள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பிணை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் ஸ்ரீகாந்த் பிணைக்கு விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒன்றரை வருடங்களாக ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தி வந்திருக்கிறார். இதற்காக நட்சத்திர விடுதிகளில் நடக்கும் விருந்துகளுக்கு ஸ்ரீகாந்த் தொடர்ந்து சென்றிருக்கிறார்.
குறிப்பாக நுங்கம்பக்கம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவர் கொக்கைன் போதைப்பொருளை அதிகம் உட்கொண்டது தெரியவந்திருக்கிறது.







