செம்மணி மனிதப் புதைகுழி – அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாள்

154
0
Spread the love

 

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் ஒன்றுதிரண்டு உணர்வெழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி நேற்று முன்தினம்(23.06.2025) ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய இன்று காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு அணையா விளக்கு மூன்றாவது நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.

அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று கோரிக்கை மனுவொன்றினையும் ஆணையாளரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here