யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்று வரும் அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
உள்ளிட்டோர் சென்றிருந்ததைத் தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என மக்கள் தெரிவித்தனர்.
இதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







