மன்னார் நகரப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (24.05) மன்னாரில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியாளர்கள் தேர்வின் பின்னரே இச் சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில்,
விஷமிகளால் நடாத்தப்பட்டுள்ள இந்த மிலேச்சத்தனமான சம்பவம், பின்னனியிலிருந்து சிலரால் ஏவப்பட்டே நடைபெற்றுள்ளதாகத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
- செவ்வாய் கிழமை இரவு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.











