மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. .
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயது உணவக தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி தலைமுடியை திருத்துவதற்காக வீட்டைவிட்டுச் சென்ற அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரது மனைவி தொரடியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தார்.
பொலிஸார் விசாரணைக்காக அவரது மனைவியை அழைத்து விசாரித்தபோது, கண்டு பிடிக்கப்பட்ட சடலம் அவரது கணவருடையது
தற்கொலையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் குறித்து மஹவ தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







