செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் நேற்றைய தினம்(29.06) பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.
செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும், பல குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றில் ஒரு சிறு குழந்தையின் எலும்புக்கூடு நீல நிற பை மற்றும் சில உடை துணிகள் உடன் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யப்பட்டு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







