உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில்

50
0
Spread the love

 

மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30.06) அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து இன்று பகல் 195 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனை உட்கொண்ட சில மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து அவர்களை உடனடியாக அருகிலுள்ள கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக 16 மாணவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவை பரிசோதனை செய்ததுடன் வழங்கப்பட்ட கோழி இறைச்சி பனிக்கட்டியில் இருந்து எடுத்து தயாரிக்கப்பட்டுள்ளமை பொது சுகாதர பரிசோதகர்களின் சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பொதுசுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here