ஜூலை 16 ஆம் திகதி வரையிலான ராசி பலன்கள்

199
0
Spread the love

 

மேஷம் ராசி

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களிடமிருந்து
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி,
சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு,
வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்கள் உதவிகரமாக இருப்பார் கள்.
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக் காது.
அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
அவரிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அவர் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப் படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
பணியின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக் குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள்.திருமண முயற்சிகள் சாதக மாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.
ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால்,
உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங் களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்வது அவசியம். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி உறவு சுமுகமாகும்.
அரசாங்க வகையில் காரியங்கள் இழுபறியாகும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். பள்ளி,கல்லூரிக் கால நண்பர்களைச்
சந்தித்து மகிழும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும்.

மிதுன ராசி

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவுக் கும் வாய்ப்பு உண்டு.
முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டா கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளிடமிருந்து ந்து நீண்டநாள்களாக
எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பது மகிழ்ச்சி தரும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் என்றாலும்,
உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் எதுவும் வாங்கவேண்டாம்.

கடக ராசி

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும்.
வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண் டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது.
சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் சற்று அலைச்சலையும் செலவுகளையும் தந்தாலும் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிட்டு அவர்களை உற்சாகப் படுத்துவீர்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. அவருடன் வீண்விவாதங்களில் ஈடுபடு வதைத் தவிர்க்கவும்.
தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர் களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.

சிம்மம் ராசி

 

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும்.
சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும்.
கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தந்தையுடனான மனஸ்தாபம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலுடன் ஆதாயமும் ஏற்படக்கூடும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும் சிகிச்சை யின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய விஷயங்களில் வாழ்க்கைத்துணையின் ஆலோ சனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. சிலநேரங்களில் பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலை மைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.
தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சற்று முயற்சியின் பேரில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

கன்னி ராசி

 

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக் கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மனஉறுதி ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சில பிரச்னைகளும் ஏற்படலாம்.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத் தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். பூர்வீகச் சொத்து வகைகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைப் பொறுமையுடன் அணுகுவது நல்லது. சகோதரர்களுடன் மனவருத்தங் கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கூடுமானவரை பொறுமையுடன் அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு நண்பர்கள் வகையில் எதிர்பாராத நன்மைகளும் ஏற்படக்கூடும். பழைய கடன்களைத் தந்து முடிக் கும் வாய்ப்பு ஏற்படும்.
கொடுத்த கடனும் திரும்பக் கிடைக்கும்.

துலாம் ராசி

 

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடி யும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி
வீட்டிலேயே எளிமையாக நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தந்தையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தவும். பெண் அல்லது பிள்ளையின் வேலை விஷயமாக அலைச்சலும் செலவுகளும் சிலருக்கு ஏற்படக்கூடும் அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.
உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.

விருச்சிகம் ராசி

 

அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சிற்சில பிரச் னைகள் ஏற்பட்டு மனஅமைதியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல் வது அவசியம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். உறவினர் வீட் டில் சிறிய அளவில் நடைபெறும் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் அலைச்சலைத் தரும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தைவழி உறவினர்களுடன் சற்று இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. சிலருக்கு நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.
தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

தனுசு ராசி

 

காரியங்களிள் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும்.
தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட
வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்திலும் அடிக்கடி பிரச்னை கள் ஏற்படக்கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் குடும்பம் தொடர்பான முக்கியமான ஒரு காரியம் சாதகமாக முடியும்.
அதிகரிக்கும் பொறுப்புகளின் காரணமாக உடல்அசதியும் மனச்சோர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும்.

 

மகர ராசி

 

உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அவ்வப்போது குடும்பத்தில் சிற்சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும்.
வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பழைய வாகனத்தை மாற்றி, புது வாகனம் வாங்கும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும்.
தந்தைவழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பேச்சினால் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப் புள்ளதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும்.
மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 

கும்பம் ராசி

ஓரளவுக்கு அனுகூலமான மாதமாகவே இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் இழுபறியானாலும் முடிந்துவிடும். தந்தைவழி உறவுகளால் உதவி கிடைப்பதுடன் உபத்திரவமும் ஏற்படும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு, மனை வகைகளில் இருக்கும் பிரச்னைகளைப் பொறுமையுடன் அணுகுவது அவசியம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். கூடு மானவரை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த
படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

மீனம் ராசி

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில்
உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது அவசியம். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும்,
கடன் தொல் லைகளும் ஏற்படக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் அறிவு ரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
நீண்டகாலமாக நிறைவேற்றாமல் இருந்த குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here