இன்றைய வானிலை

53
0
Spread the love

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05.07) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும் எனவும்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலமான காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here