ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் விபத்துக்குள்ளான வேன் – 08 பேர் வைத்தியசாலையில்

49
0
Spread the love

 

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில்,வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில்
08 பேர் காயமடைந்துள்ளனர்.

நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில், இன்று அதிகாலை (10.07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாத்தறையிலிருந்து, நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன்
வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக, வேன் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here