வியானா கால்வாயில் கவிழ்ந்த கார் – இருவர் உயிரிழப்பு

117
0
Spread the love

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் இன்று (15.07) காலை, கவிழ்ந்தததில் விபத்து சம்பவித்துள்ளது.

மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காரை மீட்டனர்.

காரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், அனுமதிக்கப்பட்டபோது இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

விபத்துக்குள்ளான காரில் பயணித்த இருவரும் மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here