மஹிந்தானந்த, நளின் உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

78
0
Spread the love

 

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, மற்றும் ஓய்வு பெற்ற
இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி ஆகிய மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (21) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மூவரையும் பிணையில் விடுவித்தார்.

2014 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் இலாபம் பெறும் நோக்கில் சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அடுத்த நீதிமன்ற தினத்தில் அவர்களை நேரில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here