பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 181 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
கனடாவைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கனடாவின் மாண்ட்ரீலில் இருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.
இலங்கை சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.







