வவுனியாவில் வீடொன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்டிருந்த பாரியளவான கைக்குண்டுகள்

67
0
Spread the love

வவுனியா நேரியகுளம் பகுதியில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட பரல் ஒன்றில் கைக் குண்டுகள் இருந்துள்ளன.

கொழும்பில் துப்பாக்கியுடன் நேற்றுமுன்தினம் (24.08) கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் செட்டிகுளம் மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது நேரியகுளத்தில் வீடொன்றின் அருகாமையில் புதைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள், ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத் துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

அதனை அடுத்து குறித்த வீட்டில் வசித்து வந்த 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here