மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின்  சாதனை மாணவர்கள் கௌரவிப்பு (வீடியோ)

170
0
Spread the love

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு மன்/ புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ். சந்தியாகு FSC  தலைமையில் நேற்றைய தினம் (23.07) புதன்கிழமை நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் சர்வதேச ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் மன்னார் பேருந்து நிலையத்தில்  மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்ட பின்னர் பாடசாலை வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் பாடசாலை நுழைவாயிலில் இருந்து பேண்ட் இசை வாத்தியத்துடன் பாடசாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்வில் இளையோருக்கான ரோல்போல்(Roll ball )உலகக் கிண்ணப்  போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவ படுத்திய மாணவர்களான, ஓ.சமிசன் பர்னாந்து, ஏ.பிரைசன் ரி. டனுமிதன் சி.டடிசன் ஆகியோருடன் ஜூனியர் கெமிஸ்ட்ரி ஒலிம்பியாட் (Junior chemistry Olympiad) போட்டியில் சர்வதேச ரீதியாக 80 நாடுகளுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவன் எஸ்..அரோன் டியோறி,மற்றும் தேசிய மட்டத்தில் ஆங்கிலக் கட்டுரை எழுதுதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட ஆறாம் தர மாணவன் வி. திவ்யன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார்  உதவி மாவட்ட செயலாளர்.டிலிசன் பயஸ் மன்னார் வலய கல்வி திணைக்கள உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜேக்கப் மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பிறின்ஸ் லெம்பேட், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்,வின்சன் மன்னார் மாவட்ட Roll ball சங்கத்தின் தலைவரும் பொறியியலாளருமான விமலேஸ்வரன்பா டசாலையின் பிரதி அதிபர். சே.அஜித் ருக்சன் டலிமா,சாதனை மாணவர்களின் பெற்றோர்கள். எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

</img fetchpriority="high">