வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் போராட்டங்கள்

62
0
Spread the love

 

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழிப் பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் வவுனியாவில் புதிய பஸ் நிலையத்துக்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப் பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும், திருகோணமலையில் சிவன் கோயில் முன்பாகவும் இந்தப் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக வடக்கு – கிழக்குச் சமூக இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு அமைப்பினர் கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பாகவும் இன்று காலை 10 மணியளவில் கவனவீர்ப்புப் போராடடத்தில் ஈடுபடவுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here