இன்றைய வானிலை

62
0
Spread the love

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27.07) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மேற்கிலிருந்து தென்மேற்கு நோக்கி காற்று வீசும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், கற்பிட்டி முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை முதல் வாகரை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை முதல் வாகரை வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்று வானிலை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here