யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் அவரது மனைவி மற்றும் மகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பேராதனை – யஹலதென்ன – சுனிலகம பகுதியில் உள்ள அவரது வீட்டில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டிலுள்ள அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்; தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு 51 வயது என்பதுடன் அவருடைய மனைவிக்கு 44 வயது எனவும் மகளுக்கு 17 வயது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







