ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தொடர்பில் அவதூறான கருத்தை வெளியிட்டமைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு 10 பில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமென கோரி ஜனாதிபதி தாக்கல் செய்த மனு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையான திஸ்ஸ குட்டியாராச்சி நிபந்தனைகள் இன்றி அதற்காக கவலை வெளியிடுவதாக அறிவித்தார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மோல்டா குடியரசில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக தான் தெரிவித்த கருத்து அடிப்படையற்ற வகையில் வெளியிடப்பட்டது எனவும் அவர் மன்றில் தெரிவித்தார்.
இததைத் தொடர்ந்து வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான தேவை இல்லையென இரு தரப்பும் நீதிமன்றில் தெரிவித்தன.







