விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – தர்மபுரம் காவல்துறைக்கு உட்பட்ட தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் இன்று (31.07) இந்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.







