வடக்கு தென்னை முக்கோணவலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னாரில்(video)

255
0
Spread the love

வடக்கு தென்னை முக்கோணவலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் (31.07)காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஏற்பாட்டில், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புப் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மற்றும் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி,பிரதியமைச்சின் ஒருங்கிணைப்புச்  செயலாளர் வசந்த மூர்த்தி, கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உப்பாலி சமரசிங்க,தென்னை அபிவிருத்தி அதிகார சபை  தலைவர் சுனில்லால் ஜெயக்கொடி,  வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில்,மன்னார் மாவட்டத் தெங்கு உற்பத்தியாளர்களுக்கான உரமானியம், உதவித் தொகை,மற்றும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தென்னம் கன்றுகளும் வழங்கப்பட்டதுடன் தெங்கு உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பிலும் பனை அபிவிருத்தியை மேம்படுத்துதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு அந்தத் திட்டம் குறித்த சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இவ்விசேட கலந்துரையாடல் நிகழ்வில்,மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள்,மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் விவசாயிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.