இராமேஸ்வரம் -தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில்

54
0
Spread the love

இந்திய மத்திய அரசின் அனுமதி கிடைத்ததன் பின்னர் இராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என தமிழ் நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.

இராமேஸ்வரத்தில் புதிய துறைமுக அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, 118 கோடி இந்திய ரூபாய் செலவில், இராமேஸ்வரம் முதல் இலங்கையின் தலைமன்னார் வரையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மத்திய அரசின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் குறித்த சேவை ஆரம்பிக்கப்படும் என தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here