பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

74
0
Spread the love

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று (13.08) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், காணொளிகள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள்   தொடர்பாகத் தகவல்களை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here