மதுபோதையில் வானம் செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக பஸ் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் பொலிஸ் அதிகாரிகள் பஸ்ஸை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது
சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சாரதி கைது செய்யப்பட்டதுடன் நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு பஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது சாரதியின் இருக்கைக்குப் பின்னால் மதுபான போத்தல்கள் பல கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பஸ்ஸில் அதிகளவான பயணிகள் இருந்த நிலையில் வேறோரு பஸ் சாரதி குறித்த இடத்திற்கு பஸ்ஸை இயக்குவதற்கு நுவரெலியா பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பஸ் சாரதியை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







