கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு

150
0
Spread the love

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (23.10) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வெற்றிலைக்கேணியில் இருந்து படகில் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற 44 வயதுடைய குடும்பஸ்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இவர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.

உடனடியாக இன்னொரு படகுமூலம் தரையில் இருந்து கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த கடற்தொழிலாளரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here