2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10.08) நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 9:30 முதல் 10:45 வரை நடைபெறும்.
அதைத் தொடர்ந்து முதலாம் பகுதி காலை 11:15 மணி முதல் மதியம் 12:15 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் காலை 8.30 க்குள் அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் காலை 09 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பரீட்சை இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு அளிக்கலாம்.
இதற்காக விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.






