இன்றைய வானிலை..!

55
0
Spread the love

மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும்.நீர்கொழும்பு முதல் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது

மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று, நாடு முழுவதும் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக அக்கரைப்பற்று வரையிலான கடல் பகுதிகளில், காற்றின் வேகம் மணிக்கு 50-55 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் கடல் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கலாம்.கல்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடல் பகுதிகளில், காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. வரை உயரலாம். இப்பகுதிகளில் கடல் சற்று கொந்தளிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடற்கரையோரப் பகுதிகளில் பயணம் செய்வோர் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here