2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று பிற்பகல் (10.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் இன்று (10.08) நடைபெற்றது.
பரீட்சைக்கு 03 லட்சத்து ஏழாயிரத்து 951 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கேள்விகள் கேட்பதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரணமானது என சுட்டிக்காட்டிய அவர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.







