கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது எனவும் அதனை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27.08) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில்
கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும்
என அந்த கட்சியின் இரண்டாவது மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அரசின் நிலைப்பாடு குறித்து இலங்கை ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தென்னிந்தியாவில் தேர்தல்காலம் நெருங்குவதால் இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவ்வாறான கருத்துக்களைப் பொருட்படுத்த தேவையில்லையென்றும் இராஜதந்திர மட்டத்தில் கருத்து வெளியிடப்பட்டிருந்தால் அது
தொடர்பில் கவனம் செலுத்தலாம் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார்.







