பணச் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டம் அமுலுக்கு

129
0
Spread the love

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் இன்று (03.09) சான்றுரைப்படுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்.

கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை அடுத்து திருத்தங்களுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 17 இலக்க பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

இலங்கையில் பணச்சூதாட்டத் தொழிலை ஒழுங்குபடுத்தல், பணச்சூதாட்டச் செயற்பாடுகளுக்கு தனியான ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை ஸ்தாபித்தல் என்பவற்றுக்கு இந்த சட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here