அம்பலாங்கொடை – ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (09.09) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







