ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் கோர விபத்து – எழுவர் காயம்

171
0
Spread the love

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எழுவர் காயமடைந்துள்ளனர்.

நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இன்று (12.09) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிர் திசையில் பயணித்த காருடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்துள்ளர்.

அவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், ஒரு பிள்ளையை தவிர ஏனைய அறுவரும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here