தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்தி பவனி

291
0
Spread the love

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது இன்று வெள்ளிக்கிழமை (19.09) காலை மன்னார் நகர பகுதியை வந்தடைந்தது.

தியாக தீபம் தீலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயகப் பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் மன்னார் மக்களின் அஞ்சலிக்காக இன்றையதினம் வருகை தந்திருந்தது.

இதன்போது பொது மக்கள், அருட்தந்தையர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மன்னார் நகர் பிரதான சுற்றுவட்ட பகுதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன் அதனை தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here