யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று (29.09) காலை கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்திற்கு இடையே அங்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர், பின்னர் கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு தகாத வார்த்தை பயன்டுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.







