பெற்றோல், டீசல் விலை குறைப்பு

218
0
Spread the love

இன்று (30.09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்  அதன் புதிய விலை 277 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்  அதன் புதிய விலை 335 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்  அதன் புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here