சங்குப்பிட்டிப் பாலம் நாளை அதிகாலை முதல் மீண்டும் திறப்பு!

65
0
Spread the love

நாவற்குழி – கேரதீவு – மன்னார் (A32) வீதியிலுள்ள சங்குப்பிட்டிப் பாலத்தின் அவசர திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், நாளை (12) அதிகாலை 1.00 மணி முதல் பாலத்தின் ஊடான அனைத்து வகையான போக்குவரத்துகளும் வழமைக்குத் திரும்புமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி நிறைவேற்றுப் பொறியியலாளர் அறிவித்துள்ளார்

பாலத்தின் அவசர திருத்த வேலையின் நிமித்தம் கடந்த 7 ஆம் திகதிமுதல் இப்பாலத்தினூடான போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருத்த வேலை நிறைவடைந்து நாளை அதிகாலை  மீண்டும் பாதை திறக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here