கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்று (01.10) பிற்பகல் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன .
முகமாலை வடக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டினை சுத்தம் செய்யும் போது வெடிக்காத குண்டுகளை கண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்







