சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

118
0
Spread the love

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 673 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.

அவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சத்து 15 ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே ஒகஸ்ட் மாதத்தில் சுற்றுலா வருவாய் மூலம் இலங்கை 259 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here