செம்மணி மனிதப் புதைகுழி சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் நிறைவு

165
0
Spread the love

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி செம்மணியில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் இன்றாகும் (01.10).

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டம் ஆரம்பமானது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், இலங்கையில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

மற்றும் இன்றைய தினம் (01.10) உலக சிறுவர் தினமாக உள்ள போதிலும் இது எமக்கு துக்க தினம் எனவும் காணமல் ஆக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உடனடியாக நீதி வேண்டும் எனவும் செம்மணி மனித புதை குழிக்குள் மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இந்த நாள் தமக்கு துக்க தினம் என கூறி தமது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here