ஒலுவில் குழந்தை கைவிடப்பட்ட சம்பவம்

207
0
Spread the love

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் குழந்தையின் தாய் மற்றும் தந்தையை, நாளை (03.10) வரை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் நேற்று (03.10) விசாரிக்கப்பட்ட வழக்கில், குழந்தையை கைவிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் தந்தை ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

17 வயதுடையவர்களுக்கு, திருமணமாகாத உறவின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.09) குறித்த பெண் குழந்தை பிறந்துள்ளது.

தந்தையின் உறவினர்கள் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தாய் வீட்டில் குறித்த பெண் குழந்தையைப் பிரசவித்தார்.

இந்த விடயத்தை அறிந்து  குழந்தையின் தந்தை காதலியின் வீடு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன். உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு அந்த உறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப் படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது.

இந்தப் பின்னணியில்  குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here