முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் விடுதலை புலிகளின் கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள 168 ஆம் இலக்க தென்னம் தோட்ட காணியில் உரிமையாளர் துப்பரவுப்பணிகளை மேற்கொண்ட போது காணியில் ஆர்.பி.ஜி ரக குண்டுகள், விடுதலை புலிகளின் கொடி என்பன இருந்துள்ளதை கண்டுள்ளார்.
இதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் காணியின் உரிமையாளரினால் நேற்று (01.09) காலை முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.







