கைதிகளை பிரத்தியேக சிறையில் தடுத்துவைக்க நீதவான்கள் உத்தரவிடக்கூடாது

99
0
Spread the love

எந்தவொரு சந்தேகநபர்களை அல்லது கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு நீதவான்கள் உத்தரவிடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தி நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை வௌியிட்டுள்ளது.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையெழுத்துடன் நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் அல்லது கைதிகள் பிரத்தியேக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், எந்தவொரு சந்தேகநபர் அல்லது கைதிக்கு விசேட பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிடக் கூடாதெனவும்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here