மைத்திரியிடம் 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

146
0
Spread the love

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுமார் 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று காலை (13.10) இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

சுமார் 5 மணி நேர வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், பிற்பகல் 02 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றில் இடம்பெற்ற மோசடி தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here